கி.பி. 1994 ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் தேதி,மரியாதைக்குரிய மவ்லவி அல் ஹாபிழ் அஹமது கபீர் ஹஜ்ரத் அவர்களால் துவக்கப்பட்ட அல் சாதிக் டிரஸ்ட் கீழ்கண்ட நபர்களை உறுப்பினர்களாக கொண்டு செல்படத் துவங்கியது.
 1. ஜனாப் அஹ்மது கபீர் த/ பெ அப்துல் ஹமித்
 2. ஜனாப் நஜீர் அஹமது த/ பெ அப்துல் வஹாப் 
 3. ஜனாப் ஜலீல் சுல்தான்  த/ பெ கமாலுத்தீன் 
 4. ஜனாப் ஜமாலுத்தீன்  த/ பெ முகம்மது இப்றாஹீம்
 5. ஜனாப் சாதிக் அலி  த/ பெ காதர்
 6. ஜனாப் முஹம்மது சபீர்  த/ பெ அப்துல் சுபஹான்
 7. ஜனாப் லியாகத் அலி  த/ பெ அப்துல்கன் 
 8. ஜனாப் அப்துல் ஹை  த/ பெ நைனர் முஹம்மது. 
 9. முஹமது ஆரிப் த/பெ. அப்துல் அஜிஸ்.
இந்த அல்சாதிக் டிரஸ்ட் ஓர் சேவை இயக்கமாக வளர்ச்சியடைந்து அது துவங்கப்பட்ட காலத்திலிருந்தே இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்குட்பட்டு சமூகத்தில் பின்தங்கிய சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர் நலனில் அக்கறைக் கொண்டு சமய, சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டது.

இந்த டிரஸ்ட் துவங்கப்பட்ட காலத்திலிருந்தே வட்டிக் கடனில் சிக்கி பொருளாதார இழப்புக்கு ஆளாகும் சூழலில் உள்ள நபர்களை கண்டறிந்து வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தியது அதன் மூலம் பல நூறு நபர்கள் பயன் அடைந்துள்ளனர்.

மேலும் அவசரகால மருத்துவ உதவிக்கு கடன் உதவிசெய்தது, உயிர் காக்கும் சேவையாக மருத்துவத்திற்குண்டான தொகையையும் வழங்கியது.

அறுவை சிகிச்சை பெற்றே உயிர் வாழ முடியும் எனும் சூழலில் உள்ள நபர்களுக்கு பண உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

ஏழை எளியோருக்கான திருமண உதவி 

சமூகத்தில் பின்தங்கிய ஏழை எளிய மக்களுக்கு அவர்களின் வேண்டுக் கோளுக்கிணங்கவும் விருப்பத்தின் பேரிலும் சமய பாகுபாடின்றி அவ்வப்பொழுது உள்ள பொருளாதார சூழலை கவனித்து திருமண உதவி வழங்கப்படுகிறது.

சமூக நலன் சமூதாய மேம்பாடு

சமூதாய முன்னேற்றம் அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

குறிப்பாக தெருக்களில் குடிநீர் குழாய் பதிக்க ஏற்பாடு செய்தது.

முஸ்லிம் தெருவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கடந்த 2007 ஆம் ஆண்டு ரூ. 70,000  ஆயிரம் கொடுத்து மக்களின் அடிப்படைத் தேவையான நீர் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் தனது ஏற்பாடு தனது பங்களிப்பை செய்துள்ளது.

கடந்த 2009 ஆண்டு காஜாமலை பகுதிகளில் உள்ள மலைக்கு வரும் யாத்ரீகர்களின் நீர் தேவையை பூர்த்தி செய்திடவும் அப்பகுதியில் வசித்து வரும் மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்திடவும் மஸ்ஜிதே ஹீஷைன் பள்ளி வாசலின் எதிர்புறம் ரூ. 50,௦௦௦ ஆயிரம் செலவில் சிறு மின் நீர்மூழ்கி மோட்டாரும் சின்டக்ஸ் நீர் தொட்டியும் அமைத்து நீர் தேவையை பூர்த்தி செய்தது. அவ்வப்போது தேவைப்படுகிற அவசிய தேவைகளை நிறைவேற்றுகிறது.

மற்றும் கோடைக்காலங்களில் இலவச தையல் பயிற்சி, கணினி பயிற்சி, போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தி, அதிலும் நலிந்த விதவை பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து, பயிற்சிக்குப் பின் சான்றிதல் வழங்கபடுகிறது.மேலும் ஆண்டுதோறும் விண்ணப்பித்து உதவிகோரும்,தனித்து விடப்பட்டு தவிக்கும் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு தாயன்பு அரவணைப்பு உதவிகள், முதியோர்களுக்குத் தக்க சேவைகளை விதவைகளின் நல்வாழ்விற்க்குத் தேவையான உதவிகளையும் செய்து வருகிறது.

இந்த அல் சாதிக் ட்ரஸ்டின் சேவைகள் அனைத்து நல்லுள்ளம் படைத்த சமுதாய புரவலர்கள் மற்றும் ஆர்வலர்களின் உதவியால் சிறப்போடு நடைபெற்று வருகிறது.


சில ஆண்டுகளாக,
 • இலவச கண் சிகிச்சை முகாம்
 • இலவச பல் சிகிச்சை முகாம் 
 • கருவறை தொற்று நோய் கண்டறிதல் முகாம்.
 • இரத்த தான விழிப்புணர்வு முகாம்.
என பல்வேறு முகாம்களை நடத்தி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

கல்வி உதவி:

ஏழை எளிய மக்களும் கல்வியறிவு பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் 1994 - ஆம் ஆண்டு அல் ஜமி அத்துஸ் சாதிக் என்ற பெயரில் ஒரு சமுதாய மேம்பாட்டின் உயர்வுக்காக எந்த இலாப நோக்கமின்றி ஒரு சேவையின் நோக்கமாகவே ஒரு பிரைமரி பள்ளியை தொடங்கி சீரும் சிறப்புமாக நடத்தி வந்தது. நாளடைவில் பிரைமரிப்பள்ளி மாணவர்களின் வகுப்பு எண்ணிக்கைக்கேற்ப மெட்ரிக்குலேசன் பள்ளியாக தரம் உயர்ந்து பத்தாம் வகுப்பு வரை அங்கீகாரம் பெற்றுள்ளது.

இப்பள்ளி துவங்கிய நாளது முதல் அதில் படிக்கும் ஏழை எளிய மிகவும் வசதியற்ற மாணவ மாணவியர்களுக்கு சீருடை, புத்தகம், நோட்புக், வாகனக் கட்டணம் கல்விக் கட்டணம் - என ஆண்டுக்கு 75 மாணக்கர்கள் வரை முழுவதுமாய் பொறுப்பேற்று அவர்களும் கல்வியில் முன்னேற்றம் காண வழி வகுத்தது.

ஆதறவற்ற தாய், (அ), தந்தை இழந்த மாணவ மாணவியர்களை கண்டறிந்து அவர்களின் நலனிலும் அக்கறை கொண்டு கல்வி தொகை முழுவதும் இலவசமாக செய்து வருகிறது.

10 ஆம் வகுப்பு அங்கீகாரம் பெற்ற காலகட்டத்திலிருந்து ஒரு சில ஆண்டைத்தவிர இதர ஆண்டுகள், 2002, லிருந்து 2011 வரை 10, ஆம் வகுப்பு மாணவர்கள் 100% சதவிகித விழுக்காடு தேர்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.

பயணத்தின் மற்றும் ஓர் மைல் கல்:

அல் சாதிக் டிரஸ்ட் தனது சேவை பயணத்தின் மற்றொரு அங்கமாக 2011 - ம் ஆண்டு பஷீரூல் உலும் அரபிக் கல்லூரியை துவக்கம் செய்து குர்ஆன் கல்வியில் நம் சமூக மக்கள் பின்தங்கி இருப்பதை ஆழ்ந்த கவலையுடன் சிந்தித்து குர்ஆன் மனன கல்வியகம் ஒன்று தொடங்கப்பட்டது. அதில் பயிலும் மாணவர்கள் அகமிய கல்வியான குர்ஆன் கல்வியை பஷீரூல் உலும் அரபிக் கல்லுரியில் படிப்பதுடன் ஆங்கில மொழி வாயிலான பள்ளிக் கல்வியை அல் ஜமி அத்துஸ் சாதிக் மெட்ரிக்குலேசன் பள்ளியில் படிக்கும் விதமாக வழிவகை செய்துள்ளது 

தேவைகள்:


அல் சாதிக் டிரஸ்ட்-ல் நடைபெறும் இவ்வுயரிய சேவைகள் பரவலாக்கப்படுவதற்கும் இன்னும் வளர்ச்சி அடைவதற்கும் அதற்கென சொந்த கட்டிடமும் நிதி உதவியும் தேவைப்படுகிறது அடியார்களுக்கு செய்யும் உதவி அல்லாஹ்வீன் சன்னிதனத்தில் அங்கிகரிக்கப்படுகிறது எனும் உயரிய வாக்குகேற்ப அல் சாதிக் டிரஸ்ட்டின் சேவைகள் தாங்களும் பங்குகெடுத்துக் கொள்ள விரும்புகிறோம்.

அல் சாதிக் ட்ரஸ்டின் சேவைகளை தொடர எல்லாம் வல்ல இறைவனிடம் நாம் பிரார்த்திப்போமாக.

A.J. சாதிக் மெட்ரிக் பள்ளி (அல் சாதிக் அறக்கட்டளை) காஜாமலை, திருச்சிராப்பள்ளி - 23
தமிழக அரசு அங்கீகாரம் பெற்றது. போன் : 00431 - 2423181, செல் : 9994344448