குர்ஆன் கல்வியில் நம் சமூக மக்கள் பின்தங்கி இருப்பதை ஆழ்ந்த கவலையுடன் சிந்தித்து குர்ஆன் மனன கல்வியகம் ஒன்று தொடங்கப்பட்டது. அதில் பயிலும் மாணவர்கள் அகமிய கல்வியான குர்ஆன் கல்வியை பஷீரூல் உலும் அரபிக் கல்லுரியில் படிப்பதுடன் ஆங்கில மொழி வாயிலான பள்ளிக் கல்வியை அல் ஜமி அத்துஸ் சாதிக் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்கும் விதமாக வழிவகை செய்துள்ளது 
தேவைகள்:
அல் சாதிக் டிரஸ்ட்-ல் நடைபெறும் இவ்வுயரிய சேவைகள் பரவலாககப்படுவதற்கும் இன்னும் வளர்ச்சி அடைவதற்கும் அதற்கென சொந்த கட்டிடமும் நிதி உதவியும் தேவைப்படுகிறது அடியார்களுக்கு செய்யும் உதவி அல்லாஹ்வீன் சன்னிதனத்தில் அங்கிகரிக்கப்படுகிறது எனும் உயரிய வாக்குகேற்ப அல் சாதிக் டிரஸ்ட்டின் சேவைகள் தாங்களும் பங்குகெடுத்துக் கொள்ள விரும்புகிறோம்.
தேவைகள்:
நமது இந்த அரபிக் கல்லூரி சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது என்றாலும் அதற்கென வகுப்பறை கூடங்கள் நூலகம், ஆசிரியர்கள் ஓய்வு அறை போன்றவை தேவைப் படுகின்றன. நிதி பற்றாகுறை காரணமாக அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத சூழலில் இயங்கி வருகிறது.இந்த தேவைகளை நிறைவு செய்கின்ற நல்லுள்ளம் கொண்ட நன்மக்கள் அரபிக் கல்லுரியின் உயர்ந்த நோக்கத்தை கருத்தில் கொண்டு உதவிகள் செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
A.J. சாதிக் மெட்ரிக் பள்ளி (அல் சாதிக் அறக்கட்டளை) காஜாமலை, திருச்சிராப்பள்ளி - 23
தமிழக அரசு அங்கீகாரம் பெற்றது. போன் : 00431 - 2423181, செல் : 9994344448