1991 ஆம் ஆண்டு மரியாதைக்குரிய மவ்லவி அல் ஹாபிழ் A. அஹமது கபீர் ஹஜரத் அவர்களால் இந்தப்பள்ளி நிறுவப்பட்டது. பள்ளியின் முதன்மையான கொள்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு நல்ல கல்வி அளித்தல்:

ஆங்கில மொழி வாயிலாக, மெட்ரிக்குலேஷன் கல்வி என்பது உயர்ந்த நடுத்தர வர்க்க குடும்பத்திலுள்ள மாணவ - மாணவிகளுக்கு மட்டுமே சாத்தியம் என்பது அனைவரும் அறிந்த உண்மை ஆனால் 

அல்லாஹ்வின் பார்வையில் அனைவரும் சமம் என்ற ஹதீஸ-க்கு ஏற்பவும் கல்வி எல்லோருக்கும் பொதுவானது மற்றும் கடமையானது என்ற உயர்ந்த கொள்கையின் அடிப்படையில் எங்களது இந்த பள்ளி துவக்கம் செய்யப்பட்டது. சமுதாயத்தில் பின் தங்கிய நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த கவனிப்பற்ற மாணவர்களுக்கு ஆங்கில மொழி வாயிலாக கல்வியை கற்றுக் கொடுப்பதை நோக்கமாக கொண்டு அல் ஜமி அத்துஸ் சாதிக் மெட்ரிக் பள்ளி செயல்பட துவங்கியது.

2. ஆங்கில வழி பாடத்திட்டத்தோடு அரபு வழியில் இஸ்லாமிக் கல்வியை அளித்தல்:  

சமுதாய மேம்பாட்டிற்கு பொருளியல் கல்வியோடு வாழ்வியல் கல்வியையும் இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளையும் இணைந்து கற்றுக் கொள்ளவிட்டால் இரு உலகிலும் வெற்றியை நிறைவாக பெற முடியாது என்ற அடிப்படையில் இஸ்லாமிய வாழ்க்கை வழிமுறைகளை சிறந்த முறையில் தகுந்த வகையில் தீனியாத் வகுப்புகள் என்ற அமைப்பில் இப்பள்ளியில் நடத்தப்படுகின்றது.
 
3.இஸ்லாமிய மரபு உடை:

இந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் இஸ்லாமிய உடை பழக்கத்தை கண்டடிப்பாக பின்பற்ற வேண்டும். மாணவிகள் பள்ளி சீருடையுடன் புர்கா மற்றும் மக்கானாவும் (Shaul) மாணவர்கள் முழுக் கை சட்டை பேன்ட் உடன் தொப்பியும் அணிந்து வர வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

4. தீனியாத் வகுப்புகள்:

இப்பள்ளி ஷரிஅத்தின் அடிப்படையில் இஸ்லாமிய வாழ்க்கை வழிமுறைகளை கற்றுத் தரப்படுகின்றன. மழலையர் முதல் உயர் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் வரை அனைவரும் குர்ஆன் ஹதீஸ் கூறப்பட்டுள்ள கொள்கைகளின் படி வாழ்வதற்கு ஆர்வமூட்டப் படுகிறார்கள். அத்துடன் ஆங்கில மொழி வழியாக எடுத்துச் சொல்லவும்படுகின்றன.

5. ஒழுக்கமே பள்ளியின் அச்சாணி: 

அனைத்து வகைகளிலும் முக்கியமானது ஒழுக்கம். மனவரிகள் அனைவரும் பள்ளியின் காலை வணக்கத்தில் தவறாது கலந்துக் கொள்ள வேண்டும். பள்ளியிலும் வீட்டிலும் தொழுகைகளை சரியாக நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சக மாணவர்களுடனும் அன்பாக, கண்ணியமாக, மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்தப்படுகிறது.

6.பள்ளியின் அன்றாட செயல்பாடு :
இப்பபள்ளியில் நடைபெறும் காலை வணக்கத்தில் நாட்டுபற்று ம்ற்றும் மார்க்கப்பற்று கொண்டுள்ள செய்திகளை தெரிவிப்பதுடன் மாணவர்கள் கடமையும் எடுத்துரைக்கப்படுகிறது மேற்கூரிய ஆறு கொள்கைகளின் வழியில் இயங்கி வரும் இந்தப் பள்ளி அல் சாதிக் டிரஸ்ட்ஆல் நிர்வகம் செய்யப்படுகிறது இந்த  டிரஸ்ட்-ல் அறிஞர்கள் வணிகர்கள் , இங்ஞினியர்கள், வக்கீல் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர் அனுபவமிக்க நீர்வாகிகள் கல்லூரி பேராசிரியர்கள்,ஓய்வுப் பெற்ற தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் அடங்கிய கல்விக் குழு இந்த டிரஸ்ட்-க்கு உறுதுணையாக உள்ளது 

மேற்கூரிய ஆறு கொள்கைகளின் வழியில் இயங்கும் இந்தப்பள்ளி "அல் சாதிக் ட்ரஸ்ட்" ஆல் நிர்வாகம் செய்யப்படுகிறது. இந்த ட்ரஸ்டில் உலமாக்கள், வணிகர்கள், இங்ஞினியர்கள், வக்கீல்கள் உறுப்பினர்கள் குழு உள்ளது, அனுபவமிக்க நிவர்கிகள், கல்லூரி பேராசிரியர்கள், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் அடங்கிய 'கல்விக்குழு' ட்ரஸ்டுக்கு உதவுகிறது.

சிறப்புகள்:
குறைந்த கட்டமைப்புகளுடன் கூடிய ஒரு பொது கட்டடத்தில் இப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் பெரிய மனது படைத்த நல்லுள்ளம் கொண்ட உதவியாளர்களால் இப்போது பள்ளி சொந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது. 2002 - ம் ஆண்டு தமிழக அரசால் மெட்ரிக்குலேஷன் பள்ளியாக அங்கீகாரம் பெற்றது. ஒரு சில ஆண்டை தவிர 8 - ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு மெட்ரிக் தேர்வில் 100% தேர்ச்சி அடைந்து உள்ளன. இதற்காக உறுதுணையாக இருந்த ஆசிரிய பெருமக்களின் உயர் சேவைக்கு மிக்க நன்றி. 

தேவைகள்:
நமது இந்த பள்ளி சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது என்றாலும் அதற்கென வகுப்பறை கூடங்கள், நூலகம் ,சோதனைக்கூடம், ஆசிரியர்கள் ஒய்வு அறை போன்றவை தேவைப்படுகின்றன. காலி மனைகள் பள்ளியைச் சுற்றி இருந்தாலும் நிதிப் பற்றாக்குறை காரணமாக அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத சூழலில் இயங்கி வருகிறது இந்த தேவைகளை நிறைவு செய்கின்ற நல்ல உள்ளங்களை எதிர்பார்க்கிறோம்.

குறைந்த கட்டமைப்புகளுடன் கூடிய ஒரு பொதுக்கட்டடத்தில் இந்தப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் பெரிய மனது படைத்த நல்லுள்ளம் கொண்ட உதவியாளர்களால் இப்பொழுது பள்ளி சொந்தக் கட்டடத்தில் இயங்கிவருகிறது.

2002 ஆம் ஆண்டிலேயே தமிழக அரசால் மெட்ரிக் பள்ளியாக அங்கீகாரம் பெற்றது. ஆம் இது ஒரு பெருமைப்பட வேண்டிய ஒன்று. ஆனால், உயர்ந்த இலக்கும் , சேவை மனப்பான்மையும், இருந்தாலும் உண்மையில் அனைத்தையும் செயல்படுத்தத்தகுந்த நிதியுதவி இல்லாமல் இருக்கும் நிலை உள்ளது.இந்த தேவைகளை நிறைவு செய்கின்ற நல்லுள்ளம் கொண்ட நன்மக்கள் பள்ளியின் உயர்ந்த நோக்கத்தை கருத்தில் கொண்டு உதவிகள் செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
A.J. சாதிக் மெட்ரிக் பள்ளி (அல் சாதிக் அறக்கட்டளை) காஜாமலை, திருச்சிராப்பள்ளி - 23
தமிழக அரசு அங்கீகாரம் பெற்றது. போன் : 00431 - 2423181, செல் : 9994344448